அந்த தொழிலே போதும்…. சைடு பிசினஸ் செய்து கோடி கணக்கில் கல்லா கட்டும் டாப் நடிகைகள்!

Author: Shree
14 July 2023, 8:49 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகைகள் பலர் சினிமாவில் கோடி கணக்கில் சம்பாதித்துக்கொண்டிருக்கும்போதே சைடு பிசினஸ் செய்து பல கோடி வருமானம் பார்க்கிறார்கள். அதிலே அவர்கள் வாழ்க்கை முழுக்க செட்டில் ஆகும் அளவுக்கு சம்பாதித்து வைத்துக்கொள்கிறார்கள். அதனால் தான் சினிமா கைவிட்டாலும் பரவாயில்லை என தைரியமாக இருகிறார்கள். அதில் யார் யார் என்னென்ன தொழில் செய்கிறார்கள் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

நயன்தாரா:

சினிமாவில் நடித்து டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கும்போது பலகோடி முதலீடு செய்து லிப்பாம் நிறுவனம் ஒன்றை துவங்கி நடித்தி வருகிறார் நயன்தாரா.

தீபிகா படுகோன்:

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் ஒரு படத்திற்கே ரூ.15லிருந்து ரூ.30 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். அதிலே அவரது வாழ்க்கை ராணி போன்று இருக்கும். ஆனால் அதையும் தாண்டி 82E என்ற பெயரில் தோல் பராமரிப்பு பிராண்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

காஜல் அகர்வால்:

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், தனது கணவர் உதவியுடன் TAC பியூட்டி ஃபுல் ஐ காஜல்‘ என்ற அந்த நிறுவனம் ஒன்றை அண்மையில் ஆரம்பித்து பிசினஸ் செய்து வருகிறார்.

கத்ரீனா கைஃப்:

இந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இடம்பிடித்திருக்கும் நடிகை கத்ரீனா கைஃப்: பல வருடங்களுக்கு முன்னரே மேக்கப் பிராண்ட் தொடக்கி தொழில் நடத்தி வருகிறார். அந்த தொழிலுக்கு நயன்தாரா விளம்பரம் செய்து ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ரா:

மிகவும் திறமையான நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட், பாலிவுட் என ரவுண்டு கட்டி வலம் வந்துக்கொண்டிருக்கிறார். பணக்கார நடிகைகளில் ஒருவரான இவர் அனோமலி எனும் ஹேர்கேர் பிராண்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?