இரண்டு இயக்குனர்களின் கூட்டணியில் AK62: சம்பவம் Loading..!

Author: Rajesh
5 February 2023, 1:00 pm

தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் துணிவு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.190 கோடி எனவும் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், அஜித் நடிக்க இருக்கும் AK62 படத்தின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இப்படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகுவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

ajith vignesh-updatenews360

மேலும், இப்படத்தை விக்னேஷ் சிவனிற்கு பதிலாக தடம், தடையற தாக்க, மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, அஜித்தின் AK62 படத்தை இயக்கஉள்ளதாகவும், அஜித் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கூடுதல் தகவலாக இப்படத்தில் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இணைந்துள்ளார் என தெரியவந்துள்ளது. பி.எஸ். மித்ரன் கதையை தான் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. விரைவில் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிடம் இருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 608

    1

    1