ரஜினி, கமலுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களுக்கு போட்டியாக ஒரு நடிகர் இருந்துள்ளார் என்பதை அனைவராலும் நம்பமுடியாத உண்மை. அவருடைய போதாத காலம் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்த்க்கது.
இல்லையென்றால் தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் இடங்களில் கண்டிப்பாக அவரும் ஒரு நடிகர் இடம்பெற்றிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த காலகட்டத்தில் இவரைப் பார்த்து டாப் முன்னணி நடிகர்களே பயந்து நடுங்குவார்களாம். அந்த நடிகரின் படத்திற்கு போட்டியாக இவர்களது படம் வெளியிட்டால் கண்டிப்பாக தோல்வி நிச்சயம் தான்.
அந்த அளவுக்கு அவரின் ரசிகர்களின் பேர் ஆதரவை நடிகர் பெற்றவர் வேறு யாரும் இல்லை ராமராஜன் தான். இவரது நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, காவல்காரன் போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து பட்டிதொட்டி எங்கும் இவரது பாடல்கள் பட்டையை கிளப்பியது. முன்னணி நடிகர்களை ஒப்பிடும்போது இவரது படங்கள் தான் அந்த காலத்தில் அதிக ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்த ராமராஜன் 1987ம் ஆண்டு நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தது. இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டை குழந்தைகளும் உள்ளனர். இருவருமே திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர்.
தற்போது சினிமாவில் கம்பேக் கொடுத்து சாமானியன் என்கிற திரைப்படத்தில் நடித்து வரும் ராமராஜன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பேரன் செய்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். நடிகர் ராமராஜனின் மகன் அருண் ஸ்காட்லாந்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறாராம்.
அங்கு அவர் குடும்பத்துடன் உணவகம் ஒன்றிற்கு சென்றபோது அங்கு தமிழ் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததையும், இதில் ஹைலைட்டே அவரது தந்தை நடித்த கரகாட்டக்காரன் பட போஸ்டரும் தனியாக வைத்திருந்ததை பார்த்து வியந்துபோனாராம். இதைப்பார்த்து ஓட்டல் உரிமையாளரிடம் அருண் போய் பேச, அவரும் தனது தந்தையின் ஊரான சொக்கம்பட்டியை சேர்ந்தவர் என தெரியவர, அந்த ஓட்டல் உரிமையாளரும், நீங்க பார்க்க அப்பா ராமராஜன் மாதிரியே இருக்கிங்க என பேசினாராம்.
அங்கிருந்த போஸ்டர்களையெல்லாம் ராமராஜனின் பேரன் வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பினாராம். செண்பகமே செண்பகமே பாட்டு பார்த்ததில் இருந்து ராமராஜனை அவரது பேரன் cow தாத்தானு தான் கூப்பிடுவாராம். அவர் என்னுடைய போஸ்டரை வெளிநாட்டில் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டதாகவும், அந்த வீடியோ பார்க்கையில் எனக்கும் சந்தோஷமாக இருந்தது. நான் நடிச்சதே கொஞ்ச படங்களாக இருந்தாலும், அது வெளிநாடு வரை சென்றிருப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்ததாக ராமராஜன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.