காமெடி நடிகர் அடடே மனோகர் திடீர் மரணம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!
Author: Vignesh28 February 2024, 6:01 pm
பழம்பெரும் நாடக மற்றும் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகரமான கதாசிரியரும் ஆன பன்முக திறமைகளைக் கொண்ட அடடே மனோகர் சென்னையில் காலமானார். சென்னை குமரன் சாவடி பகுதியில், வசித்து வந்த இவர் வயது மூப்பு காரணமாக காலமானார்.
சென்னையை, சேர்ந்த மனோகர் ஆரம்ப காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றினார். அங்கு இருந்தபடியே, நாடகங்களில் நடிக்க தொடங்கினார். இதுவரை 3500 மேடை நாடகங்களில் நடித்துள்ளார். எண்ணற்ற டிவி மற்றும் ரேடியோ நாடகங்களில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். அதில், ஆறு நாடகங்களுக்கு மேல் அவரே எழுதி இயக்கியுள்ளார். இது தவிர வெள்ளி திரையில் 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பெரும்பாலும், நகைச்சுவை வேடங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக எஸ் வி சேகர் நாடகங்களில் பணியாற்றியுள்ளார். சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, பிளைட் 172, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி vs ரமணி, பிரேமி, ரயில் சிநேகிதம், வண்ணக் கோலங்கள் உள்ளிட்டவை இவர் நடித்த முக்கிய நாடகங்கள் ஆகும். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி காலமானார். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.