சந்திரமுகி சாமியார் மாதிரி இருக்கும் பிரபாஸ்.. 600 கோடில பொம்ம படம்.. ட்ரோல் மெட்டீரியலாக மாறிய “ஆதிபுருஷ்”..!

Author: Vignesh
16 June 2023, 3:30 pm

பாகுபலி படம் மூலம் உலகமெங்கும் பேமஸ் ஆனவர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாஹோ மற்றும் ராதே ஷியாம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. இருப்பினும் அவர் அடுத்தடுத்து நடிக்கும் பிரம்மாண்ட படங்கள் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் இருந்து வந்தது.

adipurush-updatenews360

இந்நிலையில், இயக்குனர் ஓம் ரானவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில், ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து 600 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

adipurush-updatenews360

ஆதிபுருஷ் படத்தில் கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

adipurush-updatenews360

இந்நிலையில், ராமர் கதாபாத்திரத்தில் நடித்த பிரபாஸ் சந்திரமுகி படத்தின் வரும் மந்திரவாதி போல் இருப்பதாகவும், ராவணன் கதாபாத்திரம் மிக மோசமாக வடிவமைத்துள்ளதாகவும், பல காட்சிகளில் கார்ட்டூன் போல் இருக்கிறது என்றும் ரசிகர்கள் பங்கமாய் கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

adipurush-updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 474

    1

    0