தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மட்டும் ஒரு சில படங்களில் நடித்திருந்தால் கூட தனது மிகச்சிறந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலமாகவும், அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை பக்காவாக வெளிப்படுத்தியதன் மூலமாக மிக குறுகிய காலத்திலேயே மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர்கள் எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள் .
அந்த வகையில் ஒரே ஒரு பாடத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் நடிகை அதிதி பாலன். இவரது நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அருவி. இந்த திரைப்படத்தை அருண் பிரபு என்பவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
அந்த அளவுக்கு சோசியல் மெசேஜை மிகவும் அழுத்தமாக இந்த திரைப்படம் எடுத்து கூறி இருக்கும். இதில் அதிதி பாலனின் நடிப்பு அனைவரது கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம். முன்னதாக இவர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்திருந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் பெயரிடப்படாத ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .
அதன் பிறகு தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட அதிதி பாலனுக்கு அருவி திரைப்படம் மிகப்பெரிய அடையாளமாகவும் மிகப்பெரிய அளவில் பிரபலமும் படுத்தியது. அந்த படத்திற்கு பிறகு அவர் குட்டி ஸ்டோரி மற்றும் சகுந்தலம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அதிதி பாலன் நடிகர் விஜய்யை குறித்தும் விஜய்யின் படத்தை குறித்து மிகவும் மோசமாக விமர்சித்திருக்கிறார். அதாவது நான் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை எனது நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தேன்.
அப்போது அந்த படம் போன போக்கே எனக்கு பிடிக்கவில்லை. கதையில் ஒரு விறுவிறுப்போ சுவாரசியமோ இல்லை. கால் மணி நேரத்திற்கு மேல் என்னால் படத்தையே பார்க்க முடியவில்லை. நான் தியேட்டரில் தூங்கிவிட்டேன். நான் தூங்கியதை என்னுடைய நண்பர்கள் வீடியோ எடுத்து என்னை கலாய்த்து கொண்டிருந்தார்கள் என பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
இதையும் படியுங்கள்:
மிகப்பெரிய நட்சத்திர நடிகர் ஆன விஜய்யை குறித்தும், விஜய்யின் படத்தை இவ்வளவு மோசமாக அதிதி பாலன் விமர்சித்திருப்பது தற்போது பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இவருக்கு தைரியம் கொஞ்சம் அதிகம் தான் என நெட்டிசன்ஸ் பலரும் கூறி வருகிறார்கள்.