தடபுடலா நடக்கும் திருமண ஏற்பாடுகள்…. சித்தார்த் – அதிதியின் திருமணம் எங்கு தெரியுமா?

Author:
2 September 2024, 9:37 am

வயது 45 கடந்தாலும் கூட இப்போது வரை பார்ப்பதற்கு இளம் ஹீரோவை போன்றே ஸ்லிம் பிட் தோற்றத்தில் இருந்து வரும் நடிகர் சித்தார்த் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்தது வருகிறார். இவர் முதன் முதலில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

siddharth aditi rao

அதுமட்டுமில்லாமல் அதே படத்தில் இவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் பின்னணி பாடகர், திரைப்பட எழுத்தாளர் ,இப்படி பல திறமைகளை தன்னைக்குள் வைத்திருக்கும் நடிகர் சித்தார்த் தமிழ் , பாலிவுட், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார் .

தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி?, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவிய தலைவன் ,அவள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பின்னணி பாடகராக பாடல் பாடியிருக்கிறார்.

siddharth aditi rao

இதனிடையே மகாசமுத்திரம் திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் ஹீரோயினாக நடித்த அதிதியுடன் காதல் வயப்பட்ட நடிகர் சித்தார் சில ஆண்டுகள் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார். பின்னர் இருவரும் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருப்பதியில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது இவர்களின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. அதன்படி அதிதியின் முன்னோர்களால் கட்டப்பட்ட 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வனர்பதி கோவிலில் தான் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

siddharth aditi rao

அதிதி ஹைதராபாத் மாநிலத்தின் பிரபு குடும்பத்தை சேர்ந்த ராஜ பரம்பரையை சேர்ந்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் இவர்களது முன்னோர் வனர்பதி வம்சத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி