காதல் கணவா உன்னை கை விடமாட்டேன் – சித்தார்த் – அதிதி ஜோடியின் திருமண புகைப்படங்கள் வைரல்!

Author:
16 September 2024, 7:01 pm

நடிகர் சித்தார்த் 45 வயதாகியும் இளம் ஹீரோவை போன்றே ஸ்லிம் பிட் தோற்றத்தில் இருந்து வருகிறார். தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்தது வருகிறார். இவர் முதன் முதலில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

Siddharth - Update news 360

அதுமட்டுமில்லாமல் அதே படத்தில் இவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் பின்னணி பாடகர், திரைப்பட எழுத்தாளர் ,இப்படி பல திறமைகளை தன்னைக்குள் வைத்திருக்கும் நடிகர் சித்தார்த் தமிழ் , பாலிவுட், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார் .

Siddharth Aditi Rao Hydari

தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி?, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவிய தலைவன் ,அவள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பின்னணி பாடகராக பாடல் பாடியிருக்கிறார்.

Aditi Rao Hydari and Siddharth are married

இதனிடையே மகாசமுத்திரம் திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் ஹீரோயினாக நடித்த அதிதியுடன் காதல் வயப்பட்ட நடிகர் சித்தார் சில ஆண்டுகள் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார். பின்னர் இருவரும் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருப்பதியில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

Aditi Rao Hydari and Siddharth married

இந்நிலையில் தற்ப்போது கோவிலில் தென்னிந்திய முறைப்படி எளிமையாக நடந்திருக்கிறது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: பாவம்…. பையன் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டா – பிரியங்காவின் அம்பலத்தை அவிழ்த்துவிட்ட சுசித்ரா!

Aditi Rao Hydari and Siddharth

அதன் புகைப்படங்களை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “நீ என் சூரியன், என் சந்திரன் மற்றும் என் நட்சத்திரங்கள் …” நித்தியத்திற்கும் பிக்ஸி சோல்மேட்களாக இருப்பதற்கு… சிரிப்பதற்கு, ஒருபோதும் வளராமல் இருப்பதற்கு… நித்திய அன்பு, ஒளி மற்றும் மந்திரம்…திருமதி & திரு அதிதி -சித்து என காதல் பொங்கும் மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 213

    0

    0