மனுஷனை இப்படி பார்க்க எவ்ளோவ் நல்லா இருக்கு…. அதிதியுடன் அதீத சந்தோஷத்தில் சித்தார்த் – கியூட் வீடியோ!

Author: Shree
17 April 2023, 9:50 pm

பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதையடுத்து நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார். இருவரும் ‘மஹாசமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் காதலாக உருவெடுத்தது.

அவ்வப்போது இருவரும் டேட்டிங் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர்களே வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவுட்டிங் சென்ற மகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ள அதிதி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மணிகார்ன்…எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ! திரைப்படங்கள், காதல், இசை, வலிமையான தூய்மையான இதயம் கொண்டிருப்பதற்கு, மேஜிக், நிறைய சிரிப்பு இவை எல்லாவற்றிற்கும். மேஜிக்காக இரு, நீயாக இரு மகிழ்ச்சியான சித்து நாள் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

https://www.instagram.com/p/CrIbFILMGVO/?img_index=1

  • actor rk said that he gave one crore advance to vadivelu வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…