அழுது அழுது கண்ணு வீங்கிடுச்சு.. வருங்கால மனைவியால் கண்கலங்கி அழுத சித்தார்த்..!

44 வயதாகியும் பார்த்த கண்ணனுக்கு இன்னும் இளமையோடு இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் சித்தா திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் மக்களிடையே ரீச் நல்ல விமர்சனத்தையும் கலெக்ஷனையும் குவித்தது.

இவர் 2003இல் மேக்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

இதையடுத்து நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார். இருவரும் ‘மஹாசமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் காதலாக உருவெடுத்தது. இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்கள். அவ்வப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

மிகவும் இளம் வயதிலே காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பிரிந்துவிட்ட சித்தார்த் அடுத்தடுத்து சமந்தா, அதிதி ராவ் ஹைதாரி என அழகிய நடிகைகளுடன் டேட்டிங் செய்து காதலித்தார். சமந்தாவை பிரிந்தும் சில ஆண்டுகள் கழித்து அதிதி ராவ் உடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வருகிறார். இந்த காதல் ஆச்சும் திருமணத்தில் முடிந்து சிறந்த கணவன் மனைவியாக இருப்பார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் இவர்களுடைய திருமணம் நடைப்பெற்றதாகவும், இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணமத்தில் கலந்துகொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது சித்தார்த் மற்றும் அதிதி ராவ் குறித்த ஸ்பெஷல் தகவல் தான் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து முடித்துள்ளனர். அதிதி ஸ்பெஷல் போட்டோவுடன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரப்பப்பட்ட வதங்குகளுக்கு இந்த புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தங்களுடைய நிச்சயதார்த்தம் ரகசியம் நிச்சயதார்த்தம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இது பிரைவேட் என்பது அனைவருக்கும் தெரியும். இதில், கலந்துகொண்ட அனைவருக்கும் தெரியும். குடும்ப பெரியவர்கள் பார்த்துதான் திருமண செய்தியை முடிவு செய்ய வேண்டும். இது ஒன்றும், ஷூட்டிங் தேதி அல்ல நான் முடிவு செய்ய, லைப் டைம் தேதி என்றும், பெரியவர்கள் முடிவு செய்ததால் சரியான நேரத்தில் திருமணம் நடக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க: ஃபுல் போதை.. தனுஷும் என் கணவரும் ஒரே படுக்கையில்.. புதிய புயலை கிளப்பிய சுச்சி லீக்ஸ் சுசித்ரா..!

இந்நிலையில், நடிகை அதிதி தனது வருங்கால கணவர் சித்தார்த் ஹீராமாண்டி வெப் தொடரை பார்த்து கதறி அழுததாக பேசியுள்ளார். இதில், அந்த வெப் தொடர் சித்தார்த்துக்கு மிகவும் பிடித்து விட்டது என்றும், அந்த தொடரை பார்த்து மிகவும் அவர் வருத்தம் வருத்தப்பட்டார் என்றும், அவருக்கு அப்போது, பேச்சே வரவில்லை. கண்கலங்கி அழுது அவருடைய கண்கள் வீங்கிவிட்டன. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை பார்த்தே ஆக வேண்டும் என என்னிடம் கேட்டார் என்று அதிதி கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

19 minutes ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

45 minutes ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

46 minutes ago

டிவியில் பேட்டி வரவேண்டும் என்பதற்காக எதையாவது உளறக்கூடாது : திருமாவளவனுக்கு நயினார் பதிலடி!

திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…

2 hours ago

500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்

வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…

2 hours ago

ரவீனாவுக்கு ரெட் கார்டு… சின்னத்திரை பக்கமே தலைகாட்டக்கூடாது : அதிரடி உத்தரவு!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…

2 hours ago

This website uses cookies.