படுக்கை அறை காட்சிகளில் நடிக்கும் அதிதி சங்கர்?.. அப்பா பேச்சை மதிக்காமல் கமிட்டான அந்த இயக்குனரின் படம்..!

Author: Vignesh
28 July 2023, 12:45 pm

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிகராக கலக்கி வருகிறார். சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக நடிப்பில் மிரட்டி இருப்பார். இந்த படம் அவருக்கு நடிகராக நல்ல பெயரை பெற்று தந்தது.

selvaraghavan-STALIN. updatenews360 (1)

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்போட்டை என சில முக்கிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக இவர் நானே வருவேன் என்ற படத்தை தனுஷ் வைத்து இயக்கியிருந்தார்.

இதேபோன்று விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் முக்கிய கேரக்டரில் செல்வராகவன் நடித்திருந்தார். அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் இயக்குனர் மோகன். ஜி இயக்கத்தில் தற்போது ‘பகாசுரன்’ என்ற படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார்.

இயக்குநராக கலக்கிய செல்வராகவன் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். செல்வராகவனுக்கு திரையில் எப்படி ரசிகர்கள் உண்டோ அதேபோல் அவரின் தத்துவ ட்வீட்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

7g rainbow colony-updatenews360

இதனிடையே, 2004 ஆம் ஆண்டு ரவிகிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான 7ஜி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது செல்வராகவன் இயக்க உள்ளதாகவும், இந்த படத்தில் ரவிகிருஷ்ணாவை இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கான சூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாகவும், கதாநாயகியாக நடிக்க அதிதி சங்கர் மற்றும் இவானா உள்ளிட்ட சில பேரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

7g rainbow colony-updatenews360

முதல் பாகத்தில் நடிக்கும் நடிகருக்கு நெருக்கமான மற்றும் படுக்கை அறை காட்சிகள் தாராளமாக செல்வராகவன் காட்டி இருப்பார். 19 வருடத்திற்கு முன்பு அப்படி எடுத்தார் என்றால், இன்றைய காலத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை அதிதி சங்கர் நடிப்பாரா என்றும், இதற்கு அவரது தந்தை சங்கர் எப்படி அனுமதிப்பார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Aditi-Shankar-updatenews360
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!