கிடுகிடுவென வளர்ந்து வரும் அதிதி ஷங்கர்… அமலா பால் இடத்தையே எட்டி பிடிச்சிட்டாங்களேப்பா

Author: Shree
31 July 2023, 9:10 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள். அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடியிருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது. அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதன் பின்னர் ராம் குமார் இயக்கத்தில் ‘ராட்சசன்’ 2 படத்தில் கமிட்டாகியுள்ளாராம். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல் படத்தில் நடிகை அமலா பால் நடித்திருந்தார். மாபெரும் ஹிட் அடித்த அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அதிதி ஷங்கர் கமிட்டாகியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பிரம்மிப்பாக பார்க்க படுகிறது. இயக்குனர் சங்கரின் மகள் என்பதால் பெரிய படங்கள் கூட மிகச்சுலபமாக கிடைத்துவிடுகிறது என கூறி வருகிறார்கள். இதன் மூலம் அதிதி அமலா பால் இடத்தை எட்டி பிடித்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 609

    1

    3