ஷங்கர் பொண்ணு என்பதால் சகலமும் கிடைக்குது… ஆத்திரமடைந்த டாப் ஹீரோயின்கள்!

Author: Shree
24 August 2023, 3:40 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள். அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் அதிதி ஷங்கர் தற்போது சூர்யாவிற்கு ஜோடியாக சூர்யாவின் 43 படத்தில் கமிட்டாகியிருக்கிறாராம். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசைமைக்கிறார். மிகக்குறுகிய காலத்திலே வளர்ந்துவிட்ட அதிதி ஷங்கரை பார்த்து பெரிய பேக்ரவுண்ட் இல்லாமல் திறமையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு வாய்ப்புகள் தேடிக்கொண்டிருக்கும் ஹீரோயின்கள் பலர் பொறாமை கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் டாப் நடிகைகளே ஷங்கர் மகள் மீது வெறுப்பில் உள்ளதாக செய்திகள் கூறுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 585

    1

    0