நான் எது பண்ணாலும் CRINGE’அ? ஆங்கரின் கேள்வியால் கொந்தளித்த அதிதி சங்கர்!

Author: Shree
27 July 2023, 2:31 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள். அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடியிருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது. அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் அதிதி ஷங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் Rapid Fire கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது வாழ்க்கையே நீங்க பண்ண CRINGE’ஆன விஷயம் எது என்ற கேள்விக்கு பதில் அளித்த அதிதி சங்கர் ” அட யாருப்பா நீங்க நான் என்ன பண்ணாலும் அத CRINGE னு தான் சொல்றாங்க” ஆனால், அதை பற்றியெல்லாம் எனக்கு கவலையே இல்ல என்னவேனாலும் சொல்லிக்கோங்க என ஆங்கரின் கேள்வியால் கடுப்பாகினாலும் செம கூலாக பேசியிருக்கிறார்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 353

    0

    0