அட கொஞ்சம் பொருமா.. வில்லன் நடிகருடன் ரொமான்ஸ் செய்ய ஆர்வம் காட்டும் அதிதி சங்கர்..!
Author: Vignesh27 June 2024, 4:31 pm
பிரம்மாண்ட இயக்குனரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி சங்கர். இவரின் முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகர் கார்த்திக்கு ஹீரோயினாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதேபோல், கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு, ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில், தற்போது மணிகண்டன் நடித்த குட் நைட், லவ்வர் போன்ற வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் கமிட்டாகி உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிக்க அதிதி சங்கர் ஆர்வம் காட்டி உள்ளாராம். மாஸ்டர், கைதி போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் சாமீபகாலமாக ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இந்த காம்போ மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.