சிவகார்த்திகேயனுடன் அந்த விசயத்தை முடித்த வாரிசு நடிகை..- வைரலாகும் புகைப்படம்..!
Author: Vignesh6 June 2023, 10:50 am
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
முன்னதாக, சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக உள்ளார். அதிதி ஷங்கர் தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதனிடையே, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் அதிதி நடித்துள்ளார். இந்த படத்திற்காக, 25 லட்சம் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இவர் ஒருசில படங்களில் கமிட்டாகி தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர், மாவீரன் படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருடன் புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.