பிரபல பாடகரின் வாழ்க்கையை சீரழித்த ஷங்கர் மகள்… உன் ஆசைக்கு அடுத்தவங்க பலி ஆடா?

Author: Shree
18 August 2023, 12:28 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள். அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடியிருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது. அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் இடம்பெற்ற மதுரை வீர அழகுல பாடல் பாடியிருந்தார். ஆனால் இப்பாடலை முதலில் ராஜலக்ஷ்மி தான் பாடினாராம். பின்னர் அவரை தூக்கிவிட்டு அதிதி ஷங்கரை பாடவைத்தார்களாம். அதேபோல் தான் மாவீரன் படத்திலும் “வண்ணாரப்பேட்டையில” பாடலை பாடகி மீனாட்சி இளையராஜா தான் பாடியிருந்தாராம். பின்னர் அவரை தூக்கிவிட்டு அதிதியை பாடவைத்தார்களாம். இப்படி தொடர்ந்து அதிதி அடுத்தவர்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருவதால் அந்த பிரபலங்கள் கண்ணீர் விட்டு அழுகிறார்கள்.

  • actor rk said that he gave one crore advance to vadivelu வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…