சினிமாவை விட்டுவிட்டு படித்த படிப்பிற்கு வேலை செய் கறாரா கூறிய சங்கர் – டாக்டர் உடையில் அதிதி!

Author: Shree
17 November 2023, 7:44 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

aditi shankar

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள்.

அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

aditi shankar - updatenews360

அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடியிருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது. அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷுக்கு ஜோடியாக நடித்து வருவதாக செய்திகள் வெளியானது.

சினிமாவில் இப்படி அடுத்தடுத்து பிசியாக இருந்து வரும் நேரத்தில் திடீரென டாக்டர் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாராமில் வெளியிட்டு “டாக்டர் அதிதி ஷங்கர்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் என ஆச்சு? ஏற்கனவே சினிமாவில் கூல் சுரேஷ் உங்களுக்கு காதல் ப்ரொபோஸ் செய்தபோதே உங்க அப்பா ஷங்கர் செம காண்டாகி விட்டார். அதனால் சினிமாவே வேண்டாம் படித்த படிப்பிற்கு வேளைக்கு போ என்று கறாரா கூறிவிட்டாரா? என கேட்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி