விரைவில் திருமணம்?.. தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் அப்பா.. அதிதி சங்கர் வெளியிட்ட பதிவு..!

Author: Vignesh
9 August 2023, 5:45 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Sankar- updatenews360

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள். அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

aditi shankar - updatenews360

அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடியிருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது. அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

aditi shankar -updatenews360

இந்நிலையில், சினிமா ஒருபுறம் இருக்க இவரது இரு மகள்கள் வாழ்க்கையை நினைத்து நிம்மதி இல்லாத நிலையில் இருந்து வருகிறார் இயக்குனர் சங்கர். முதல் மகள் ஐஸ்வர்யா திருமணமாகி ஆறு மாதத்தில் மருமகன் கைது செய்யப்பட்டதால் விவாகரத்து வரை சென்று விட்டார்.

aditi shankar -updatenews360

அதனை தொடர்ந்து டாக்டர் படிப்பை படிக்க வைத்த அதிதியை பெரிய டாக்டர் ஆக்கி வெளிநாட்டில் செட்டில் ஆக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசையை வைத்திருந்த ஷங்கருக்கு இடி விழுந்ததை போல் சினிமா பக்கம் சென்றுவிட்டார்.

Aditi-Shankar-updatenews360

மகளின் ஆசைக்காக ஒரு சில படங்களில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்த நிலையில், சங்கருக்கே தெரியாமல் பல படங்களில் கமிட்டாகி அதிதி சங்கர் அதிர்ச்சியை கொடுத்தார். இதெல்லாம் பிடிக்காத சங்கர் எப்படியாவது கைமீறி போன மகளின் ஆட்டத்தை நிறுத்த ஒரு விஷயத்தை செய்து இருக்கிறாராம்.

aditi shankar - updatenews360

அதாவது குடும்பத்திற்கு அதிதி நடிப்பது பிடிக்கவில்லை என்பதால் விரைவில் ஒரு பெரிய இடத்து வரனை பார்த்து செட்டில் ஆக்க முடிவு செய்து இருக்கிறாராம் இயக்குனர் சங்கர். இரு ஆண்டுகளில் எத்தனை படம் நடிக்க முடியுமோ நடிச்சுக்கோ ரெண்டு வருஷத்துக்கு அப்புறமா கல்யாணம் என்று கறாராக கூறிவிட்டாராம்.

aditi shankar - updatenews360

ஷங்கரின் இந்த கண்டிஷனால் அதிதி சங்கர் நடித்து முடித்த வெளியான இரண்டு படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதாக தகவல்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அதிதி சங்கர் ஒரு பதிவினை போட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

aditi shankar - updatenews360

அதில், நான் ரொம்பவும் எதிர்ப்பார்க்கிறேன், யார் அந்த மாப்பிள்ளை என்று இப்போது தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி பதிலடி கொடுத்து திருமண வதந்திக்கு அதிதி சங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 678

    0

    0