அதிதி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி சங்கர் மகளை கையிலேயே பிடிக்க முடியாது..!

Author: Vignesh
9 January 2024, 3:04 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் உள்ள சில இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கிய திரைப்படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

aditi shankar - updatenews360

இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.

aditi shankar - updatenews360

இந்த படத்தில் இடம்பெற்ற ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர், மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

aditi shankar

இந்நிலையில், அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது அதிதி அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா உடன் நடிக்க, அதில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே இதுகுறித்து பேசப்பட்ட நிலையில், தற்போது ஏறக்குறைய இந்த தகவல் உறுதியாகிவிட்டது.

aditi shankar -updatenews360

இயக்கத்தில் சுதா கொங்கரா சூர்யா நடிக்க உள்ள புறநானூறு திரைப்படத்தில் அதிதி சங்கர் நடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், விஜய் வருமா நடிக்கிறார்கள். மேலும், ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தை முடித்த கையோடு பத்து நாட்கள் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் சூர்யா. அந்த பத்து நாட்கள் வாடிவாசல் படப்பிடிப்பு முடிந்த கையோடு, இந்த படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. விருமன் படத்தில் கார்த்தி உடன் நடித்த அதிதி தற்போது சூர்யாவுடன் சைலன்டாக கைகோர்த்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 317

    0

    0