சினிமாவில் ஆண்களுக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்…? ரகசியங்களை உடைத்த விஜய் யேசுதாஸ்!
Author: Rajesh20 December 2023, 4:22 pm
பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களுக்கு பாடல்கள் பாடி பிரபலம் ஆனவர். பிரபல பின்னணி பாடகரான கே. ஜே. யேசுதாஸின் மகனான இவர் 2000ம் ஆண்டு மலையாளத்திரைப்படத்தின் மூலம் பாடகர் ஆனார். இவர் தர்ஷனா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் சினிமா துறையில் உள்ள அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசிய அவர், படவாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும் என நினைப்பது தவறு. ஒரு சிலர் கிடைத்த வாய்ப்புகள் போய்விடுமோ என்ற பயத்திலே அதனை வெளியில் சொல்ல பயப்படுகிறார்கள்.
இந்த தொழில் ஆண், பெண் என்ற பாகுபாடுகள் இன்றி தான் நடக்கிறது. குறிப்பாக பெண்கள் தான் இதுபோன்ற விஷயங்களை அதிகம் சந்திக்கவேண்டியிருக்கு. நான் ஆணாக இருப்பதால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கவில்லை. ஆனால், அதற்காக ஒட்டுமொத்த சினிமா துறையையும் குறை சொல்லிட முடியாது.
இந்த பிரச்சனை எல்லாத்துறைகளிலும் உள்ளது. வணிக மற்றும் கார்ப்பரேட் துறைகளிலும் போஸ்டிங் கிடைக்க அட்ஜெஸ்ட்மென்ட் செய்கிறார்கள்.எனவே இதுபோன்ற விஷயங்களில் இருந்து மக்கள் மாறவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.