விஜய்யுடன் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட்’ஆ.. உண்மையை உடைத்த பிரபல நடிகை..!

Author: Rajesh
18 June 2023, 2:00 pm

தற்போது வளர்ந்து வரும் பல துறைகளில் ஆண், பெண் என இரு பாலினத்தவர்களும் சந்திக்கும் பெரிய சவால் அட்ஜஸ்ட்மென்ட். முக்கியமாக திரைத்துறையில் பெண்களுக்கு இது மிகப்பெரும் தொல்லையாகவும், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் இருந்து வருகிறது. பெரிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தங்களை திருப்தி செய்தால் தான் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் தான் இன்றைய சினிமா உலகம் உள்ளது.

இந்த நிலையில், விஜய் படத்தில் நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யச்சொல்லி கேட்டது குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். நடிகை பாலாம்பிகா ஒரு சில படங்களிலும் பல சீரியலிலும் நடித்துள்ளார். இவரது அப்பா பழம்பெரும் இயக்குனரான கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்தவராம்.

இதனால் தன் மகளை நடிகையாக்க நினைத்து சினிமாவில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்துள்ளார் பாலாம்பிகாவின் அப்பா. தம்பிக்கு ஒரு பாட்டு என்ற படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் பாலாம்பிகா. அதன் பின் பல படங்களில் ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அவரது அப்பா நோ சொல்லிவிட்டாராம்.

விஜய்க்கு ஜோடியாகவும் பிரசாந்திற்கு ஜோடியாகவும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அவர்களுடன் நடிக்க முடியும் என சொன்னதற்கு பாலாம்பிகாவின் தந்தை அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக்கவில்லையாம். இதனால் தான் அந்தப் படங்களின் வாய்ப்பை இழந்ததாக பாலாம்பிகா கூறியுள்ளார்.

விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை தவறிவிட்டேனே. நடித்திருந்தால் என்னுடைய ரேஞ்சே வேற மாதிரி இருக்கும். எல்லாத்துக்கும் காரணம் என் அப்பா தான் என ஒரு பேட்டியில் பாலாம்பிகா புலம்பியுள்ளார். இதற்கு பேசிய நடிகை ஷகிலா, “அப்போ அட்ஜஸ்ட்மென்டுக்கு ஓகே சொல்லிருக்கலாம்னு நினைக்கிறியா” எனக் கேட்டார். அதற்கு பாலாம்பிகா, “இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரில, எல்லாரும் தான் நடிக்கிறாங்க. என் அப்பா தான் வேண்டாம் என்று சொல்லிட்டார். என்ன செய்வது ?” என புலம்பினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!