மிகவும் ஆபத்தான நிலையில் ஆடுகளம் தாத்தா.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்..!
Author: Vignesh1 March 2024, 12:03 pm
விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அத்தனை படங்களும் சரித்திர வெற்றி படைத்தது என்றல் எது இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படங்கள் தான். பொல்லாதவன் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். சமீபத்தில் இவர் இயக்கி வெளியான திரைப்படம் தான் விடுதலை.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆடுகளம். இப்படத்தில், வேட்டைக்காரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் வி.ஐ.எஸ். ஜெயபாலன். இலங்கையில், பிறந்த இவர் தனது இளம் வயதில் இருந்தே எழுத தொடங்கியுள்ளார். ஆடுகளம் படத்தின் மூலம் நடிகராக மாறியவர் பின்னர், பாண்டியநாடு, மெட்ராஸ், இன்று நேற்று நாளை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஜெயபாலன் அவர்கள் ஆபத்தான நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது என கூறப்படுகிறது. தற்போது, இவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.