பெருசு படத்திற்கு இவ்வளவு மவுசா? முதல் நாளே பட்டையை கிளப்பிய வசூல்!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2025, 5:04 pm

நேற்று வெளியான தமிழ் திரைப்படம் பெருசு. வைபவ், சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி, தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அடல்ட் காமெடி திரைப்படமாக வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டபுள் மீனிங் வசனங்களும், வித்தியாசமான கதைக்களமும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படியுங்க: அடுத்தவங்களுக்கு வழி விடு.. விஜய் டிவி பிரியங்காவை LEFT & RIGHT வாங்கிய டிடி!

நிஹாரிகா இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களுமே சிறப்பாக நடித்துள்ளனர்.

முனிஸ்காந்த வரும் காட்சியெல்லாம் அல்டிமேட். கொஞ்சம் முகம் சுழிக்க வைத்தாலும் சிரிப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். படம் முழுக்க சிரிக்க வைத்தாலும் கடைசியல் வரும் எமோஷனலான பாடல் ரசிகர்களை கவரவில்லை.

Adult Comedy Movie Perusu First Day Collection

இந்தநிலையில் நேற்று வெளியான பெருசு திரைப்படம் முதல்நாளே ₹50 லட்சம் வசூலை ஈட்டியுள்ளது. மக்களிடையே அமோக வெற்றிபெற்றுள்ளதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே சொல்லலாம்.

  • ‘பவுன்டரி டூ பாக்ஸ் ஆபிஸ்’..மிரட்டும் வார்னர்..ராபின்ஹுட் படத்தின் ரிலீஸ் தேதி லாக்.!
  • Leave a Reply