மத கலவரத்தை உண்டாக்குகிறார் பா. ரஞ்சித் – பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

Author:
21 August 2024, 5:39 pm

தமிழ் சினிமாவில் ஜாதி மதத்தை அழுத்தம் திருத்தமாக காட்டி படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவரான பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின நாளில் வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்திருந்தார். இவர்களுடன் மாளவிகா மோகனன் பார்வதி மேனன் உள்ளிட்ட பிரபலமான நட்சத்திர பிரபலங்கள் பலர் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே சில பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக மதம்,கடவுள் வழிபாடு, சாதி உள்ளிட்ட பிரச்சனைகளால் இந்த திரைப்படம் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் இயக்குனர் பா ரஞ்சித் மீது பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அதில் தங்களான் படத்தில் புத்த மதத்தை உயர்வாக காட்ட வைணவ மதத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளானதாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த சர்ச்சைக்குரிய காட்சி படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

pa ranjith

அப்படி நீக்காவிட்டால் நீதிமன்றத்திற்கு சென்று படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்வேன் என அதிரடியாக அந்த புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த சர்ச்சைக்குரிய காட்சி பலரது மனதை புண்படுத்தும் படி இருப்பதாகவும் இதனால் மத கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கத்தில் படத்தை எடுத்திருப்பதாக பா ரஞ்சித் மீது தான் புகார் கொடுத்திருப்பதாக அந்த பெண்மணி கூறியிருக்கிறார். பா . ரஞ்சித் தங்கலான் படத்தை தொடர்ந்து தற்போது சூர்யா நடிப்பில் உருவாகும் “ஜெர்மன்” படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 184

    0

    0