12 வருடம் காத்திருப்பு… ரிலீசாகும் மதகஜ ராஜா… ஆனந்த கண்ணீரில் பிரபலம்!
Author: Udayachandran RadhaKrishnan3 January 2025, 10:56 am
12 வருடத்திற்கு பின்பு மதகஜ ராஜா படம் வெளியாக உள்ளது கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அறிவிக்கப்ப்டட படம் மதகஜ ராஜா. விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடிப்பில் உருவானது,.
அதே ஆண்டி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை படம் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி இசையமைத்த இந்த படத்தின் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. சுருக்கமாக இந்த படத்தை MGR என அழைத்தனர்.
இதையும் படியுங்க: OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன் தயாரித்த சில படத்தை விநியோகம் செய்ததில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால் படத்தை கைவிட்டனர்.
விஷால் எடுத்த பெரும் முயற்சியும் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில் சுந்தர் சி இயக்கும் படம் அண்மை காலமாக வசூல் ரீதியாக ஹிட் ஆகி வருவதால், அவரை தேடி தயாரிப்பாளர் வரிசை கட்டி வருகின்றனர்.
இந்த சூழலை பயன்படுத்தி மதகஜராஜாவை திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. அதன் படி வரும் ஜனவரி 12ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட 12வருடம் கழித்து இந்த படம் வெளியாக உள்ளதால் விஷால், சுந்தர் சி உள்ளிட் படக்குழுவினர் ஆனந்த கண்ணீரில் உள்ளனர்.