10 ஆண்டுகளுக்கு பின் டாப் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை..! இப்பவும் எப்படி இருக்காங்க பார்த்தீங்களா..!
Author: Vignesh28 November 2022, 3:00 pm
90களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை கௌசல்யா , 10 ஆண்டுகளுக்கு முன் சின்னத்திரையிலும் நடித்து வந்தார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் அவர் சன் டிவியில் டாப் சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் நடித்து இருந்தாலும், ஒரு சில குடும்ப ரோல்களில் மட்டும் நடித்து பிரபலமான நடிகைகள் இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் பல சாமி படங்களில் நடித்து 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை கௌசல்யா .

அவர் சினிமாவிற்கு பின் விஜய் டிவி, சன் டிவி, ஜெயா டிவி போன்ற முன்னணி சேனல்களில் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் சின்னத்திரையில் கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன் நடித்த அவர், தற்போது மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதாவது அவர் சன் டிவியில் தற்போது டாப் லிஸ்டில் இருக்கும் சுந்தரி சீரியலில் சிறப்பு தோற்றத்தில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சுந்தரி சீரியலில் சுந்தரி, அணு, சித்து என அனைவரும் கொடைக்கானலில் இருக்கின்றனர்.
அங்கே சுந்தரி சித்துவிற்கு ட்ரைனிங் கொடுக்க இருக்கும் கோச் கதாபாத்திரத்தில் நடிகை கௌசல்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பின் சின்னத்திரையில் நடிகை கவுசல்யா என்ட்ரி கொடுக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அவர் சுந்தரி சீரியலில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே வர இருக்கிறார் என்பதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.