ஏஆர் ரகுமான் இசைக்குழுவை சேர்ந்த பெண்ணும் விவாகரத்து அறிவிப்பு : வைரலாகும் பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2024, 4:54 pm

சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது தொடர்ந்து வருகிறது. நேற்று தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அறிவித்தார்.

இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஏஆர் ரகுமான் விவகாரத்து இன்று சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க: சூர்யாவுடன் 3வது முறையாக இணையும் டாப் நடிகை.. சம்பவம் செயயும் RJ பாலாஜி!

இந்த நிலையில் ஏஆர் ரகுமான் விவகாரத்து செய்தது போல அவருடைய இசைக்குழுவில் பணியாற்றி வரும் பேஸ் கிட்டார் கலைஞர் மோகினி டே என்ற பெண்ணும் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

Mohini Dey Announce Separation from her Husband

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது கணவருடைய பாதையும் என்னுடைய பாதையும் வேறு வேறு என தெரிந்து கொண்டதால் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருக்கிறோம். அதே சமயம் இருவரும் நல்ல நண்பர்களாக தொடர்ந்து இசைத்துறையில் பணியாற்றுவோம். இந்த நேரத்தில் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு தேவை. எங்களில் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும என குறிப்பிட்டுள்ளார்.

Ar Rahman and His Bassist Announce Divorce

29 வயதே ஆகும் மோகனி, சுமார் 40க்கும் மேற்பட்ட இசைநிகழ்ச்சிகளில் ஏஆர் ரகுமானுடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!