ராகவா லாரன்ஸ் சொன்ன புது தகவல்; படத்தில் சொன்னது உண்மையா நடக்க போகுதா?..

Author: Sudha
8 July 2024, 5:26 pm

ராகவா லாரன்ஸ், திகில் மற்றும் காமெடி கலந்த காஞ்சனா திரைப்படங்களை இயக்கினார். முனி படங்களின் வரிசையில் அடுத்து காஞ்சனா திரைப்படம் மூன்று பாகங்கள் இதுவரை வெளிவந்து விட்டன. அனைத்து பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது

தற்போது இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

பென்ஸ் திரைப்படத்தை பற்றிய அறிவிப்பை காந்த ஏப்ரல் 14 அன்று வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ். பென்ஸ் திரைப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜ் குறிப்பிடும்போது நேரம் 11:11 இந்த ஸ்பெஷல் நேரத்தில் பென்ஸ் படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவது மகிழ்ச்சி என குறிப்பிட்டிருந்தார் .

இந்நிலையில் காஞ்சனா 4 பாகம் வராதா என காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக காஞ்சனா 4 பாகத்தின் கதையை எழுதி முடித்து விட்டேன். பென்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு காஞ்சனா ஷூட்டிங் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.காஞ்சனா 3 படத்தின் இறுதிக் காட்சியில் காஞ்சனா 4 வரும் என காட்டப்பட்டு இருந்தது.சொன்னதை செய்து விட்டார் ராகவா லாரன்ஸ் என ரசிகர்கள் சிலாகித்து சொல்கின்றனர்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 142

    0

    0