நடிகையின் மடியில் தவமாய் தவம் கிடக்கும் வாரிசு நடிகர்… விவாகரத்துக்கு பின் 15 கோடியில் பங்களா பரிசு..!
Author: Vignesh29 March 2023, 10:30 am
சமந்தா – நாகசைத்தன்யா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். நான்கு வருடங்கள் வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் தீடீரென கடந்த ஆண்டு விவகாரத்தை அறிவித்தனர்.

விவகாரத்தபின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் இருவரும் வெளிநாட்டுக்கு சென்று டேட் செய்து வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், லண்டனில் இருக்கும் ஒரு பாரில் சோபிதாவுடன் நாக சைதன்யா டின்னர் சாப்பிட்டு ஓட்டல் செஃப் உடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.
தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொகுசு வீட்டினை வாங்கியுள்ளாராம். இந்த பங்களா நடிகை சோபிதா துலிபாலாவுக்காக வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.