தனிமையில் தவிக்கும் ரச்சிதா… இன்ஸ்டா பதிவால் ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்..!

Author: Vignesh
6 November 2023, 6:44 pm

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அது உண்மையில்லை கட்டுக்கதை என்பது விசாரணையில் தெரியவந்தது. தினேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க நாடகம் ஆடியதாக செய்திகள் வெளியானது.

அந்த பிரச்சனையில் இருந்து மீண்டும் வந்து தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் மகாலக்ஷ்மிக்கு மேலும், ஒரு இடி விழுந்தது. ஆம், சில தினங்களுக்கு முன்னர் பெங்களூரில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த நடிகை ரச்சிதாவின் அப்பா திடீரென காலமாகிவிட்டா ர். இந்த தகவலை கேட்டு திரை நட்சத்திரங்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டனர்,

இப்படியான நேரத்தில் ரக்ஷிதாவை பிரிந்து வாழ்ந்து வரும் அவரது கணவர் தினேஷ் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார். இந்த நேரத்தில் ரக்ஷிதா உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Rachitha-updatenews360-1

சமீபத்தில் எனக்கு நீ உனக்கு நான் என்று கூறி அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். தற்போது, தனிமை தான் அவளிடம் அடிமையாகி விட்டது என்று கூறி சோகத்துடன் எடுத்த வீடியோ ஷார்டினை பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்களும் ஆறுதலான கருத்துக்களை தற்போது தெரிவித்து வருகின்றனர்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!