கடைசில அண்ணனுக்கே ஆப்பு வச்சிட்டியே… பாலிவுட்டில் செம்ம டிமாண்ட்- அதுப்பில் ஆடும் அட்லீ!

Author: Shree
15 May 2023, 5:57 pm

நடிகர் அட்லீ விஜய் கூட்டணி என்றாலே மெகா ஹிட் தான். இவர்கள் இருவரும் இணைந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட சூப்பர் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்கள். அட்லீ விஜய்யை சொந்த அண்ணனாக பார்ப்பதாக பேட்டிகளில் கூட கூறியிருந்தார். தற்போது அட்லீ பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க. விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை விஜய்க்கு போட்டியாக அட்லீ அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். ஆம், விஜய்யின் லியோ படமும் அப்போது தான் வெளியாகிறது. அண்ணன் என கூறி சொந்தம் கொண்டாடிவிட்டு அவரையே எதிர்க்க துணிந்த அட்லீயை ரசிகர்கள் விமர்சித்தனர் . இருந்தும் ஜவான் படத்தை இயக்கிவிட்டு அடுத்ததாக விஜய்யின் 68 படத்தை இயக்கவிருந்தார் அட்லீ. ஆனால் பாலிவுட்டில் அவருக்கு அடுத்தடுத்த பெரிய நடிகர்களின் படங்களை இயக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

எனவே விஜய்யின் 68 படத்தை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது பிரபல பாலிவுட் இளம் நடிகரான வருண் தவான் உடன் அட்லீ கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஆகஸ்ட் மதம் துவங்கவுள்ள இப்படம் ஆக்‌ஷன் கதையம்சம் கொண்டு மிரட்டப்போகிறதாம். மேலும் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு படத்தை திரையிடவுள்ளனர். இதை கேட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து வருகிறார்கள். வாழ வைத்த தெய்வம் நாங்க தான் எங்ககிட்டயே உன் வேலைய காட்டுவியா? என கடுப்பாகியுள்ளனர்.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?