திருப்பி கொடுக்கும் கர்மா? கடவுளிடம் தஞ்சமடைந்த ஜோதிகா.. பிராயச்சித்தம் தேடும் சூர்யா!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2024, 1:00 pm

கங்குவா படம் தோல்வியால் நடிகர் சூர்யா மன அழுத்தத்தில் உள்ளாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் கங்குவா படம் வெளியான பின்பு சூர்யா ஜோதிகா இருவரும் கோவில் கோவிலாக சற்றி வருகின்றனர். இருவரும் கர்நாடகாவில் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் இன்று நடிகை ஜோதிகா இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவை கலந்து கொண்டு சாமி கும்பிட்டார்.

இதையும் படியுங்க: விஜய்யை டம்மியாக்கிய வெற்றி மாறன்… விடுதலை 2 ட்ரெய்லரில் அந்த வசனத்தை கவனிச்சீங்களா?!

சாமி கும்பிடுவதற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர் இன்று அதிகாலை கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் கோவில் ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.

Jyothika Dharshan in Tirupati Temple

ஒரு புறம் ஜோதிகா தனியாக கோவில் கோவிலாக சுற்றி வரும் நிலையில், e\நடிகர் சூர்யா கோவை பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார்

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தயாரிக்கும் சூர்யா 45 என்ற புதிய படத்திற்கு மாசாணி அம்மன் கோவில் படப்பிடிப்பு தொடங்கியது.

Suriya in Pollachi Masani Amman Temple

மாசாணியம்மன் கோவில் கோவில் கும்பாபிஷேகம் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளதால் பணிகள் நடைபெற்று வருகிறது. மாசாணியம்மன் பாலாயம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார்.

திடீரென நடிகர் சூர்யா கோவிலுக்கு வந்ததால் பொதுமக்கள் ஏராளமான தனது மொபைல் போனை செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 200

    0

    0