கதையை கேட்டதும் காரித் துப்பிய சிம்பு… சங்கடத்தில் இயக்குநர்!!
Author: Udayachandran RadhaKrishnan18 February 2025, 10:37 am
ஒரு படத்திற்கு கதை என்பது மிக மிக முக்கியம். ஆனால் ஒரு சில படங்கள் கதையை விட கமர்ஷியலாக சக்சஸ் ஆனதும் தமிழ் சினிமாவில் அரங்கேறியிருக்கிறது.
ஆனால் டாப்பில் உள்ள நடிகர்கள் கதையை கேட்டு நடிப்பது தான் அவர்களுடைய கேரியருக்கு அழகு. அப்படித்தான் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் கமர்ஷியல் ஹிட் அடிப்பது வழக்கம்.
இதையும் படியுங்க: இதுக்குப் பிறகு இப்படியொரு படம் பண்ண முடியுமானு தெரில.. வெற்றிமாறன் அப்செட்!
2009ல் வெண்ணிலா கபடி குழு படம் மூலம் அறிமுகமான இயக்குநர் சுசுந்திரன், தொடர்ந்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி உட்பட பல படங்களை இயக்கினார். இதில் பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவே அமைந்தன.
இவர் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் தான் ஈஸ்வரன். இந்த படத்தின் கதையை சொல்வதற்கு முன்பே, நடிகர் ஜெய்க்காக ஒரு கதையை ரெடி செய்திருந்த சுசீந்திரன், அந்த கதையை சிம்புவிடம் கூறியுள்ளார்.
கதையை கேட்டதும் சிம்பு காரித்துப்பியுள்ளார். இதெல்லாம் ஒரு கதையா என திட்டியதால், சுசீந்திரன் அந்த கதையை மாற்றி உருவாக்கியதுதான் ஈஸ்வரன் திரைப்படம். இந்த தகவலை சுசீந்திரனே சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.