அடையாளம் தெரியாத நியூ லுக்கில் அசோக் செல்வன்: டிரெண்டிங்கில் கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் ஜோடியாக அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் புதுமண தம்பதிகள் பிரபல சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். அதில் தங்கள் காதல் பயணம் முதல் திருமணம் வரை பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வருகிறார்களாம். மற்ற காதலர்களை போன்று good morning… good night இதெல்லாம் சொல்லிக்கொள்ளவே மாட்டார்களாம். ரொம்ப mature நடந்துப்போம் என கூறினார்கள். சூது கவ்வும் படத்தில் தான் இருவரும் முதன் முதலில் சந்தித்துக்கொண்டார்களாம். அப்போவே love at first sight ஏற்பட்டதாக அசோக் செல்வன் கூறினார். நண்பர்கள் பார்ட்டி ஒன்றில் கீர்த்தி அழகாக சேலை உடுத்தி இருந்ததை பார்த்து மயங்கிவிட்டாராம் அசோக். பின்னர் சில நாட்கள் படங்கள் சார்ந்து அவ்வப்போது இருவரும் சந்தித்துக்கொள்ள நேரிட்டதாம்.

இதனிடையே, திருமணத்திற்கு பின்னர் படங்களில் பிசியாக இருந்து வரும் புது மாப்பிள்ளை அசோக் செல்வன் தற்போது, தாடி வளர்த்தபடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். என்ன ஆச்சு ஒரே மாதத்தில் இப்படி மாறிட்டீங்களே ப்ரோ என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அந்த நியூ லுக் படத்திற்காக அசோக் செல்வன் வைத்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

Poorni

Recent Posts

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

48 minutes ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

1 hour ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

2 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

2 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

2 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…

4 hours ago

This website uses cookies.