சண்டை போடாதீங்கமா… நயன்தாராவை தொடர்ந்து அந்த பிரபல நடிகையையும் பாலிவுட்டில் இறக்கும் அட்லீ!
Author: Shree20 July 2023, 8:12 am
நடிகர் அட்லீ விஜய் கூட்டணி என்றாலே மெகா ஹிட் தான். இவர்கள் இருவரும் இணைந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட சூப்பர் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்கள். அட்லீ விஜய்யை சொந்த அண்ணனாக பார்ப்பதாக பேட்டிகளில் கூட கூறியிருந்தார். தற்போது அட்லீ பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க. விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார்.
சுமார் மூன்று ஆண்டுகளாக ஜவான் படம் குறித்து சில தடைகளை சந்தித்து வந்த போதும் செப்டம்பர் 7ஆம் தேதி இந்த படம் திரையில் வெளியாக உள்ளது. அண்மையில் கூட ஜவான் படத்தின் Prevue வீடியோ ஒன்று பட குழுவினர் வெளியிட்டனர். அது அணைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்தது. ஆக்ஷன் காட்சிகளாக வெளியான அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை கூறிவரும் நிலையில், பாராட்டை பெற்றது. மேலும் அதில் நயன்தாராவின் மாஸான என்ட்ரி சீன் தமிழ் ரசிகர்களை மிரளச்செய்தது.

அவன் படத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு ஒரு நல்ல ஸ்கோப் கிடைக்கும் என நிச்சயம் நம்ப முடிகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நயன்தாரா இடத்தை எட்டி பிடிக்க கீர்த்தி சுரேஷ் முயற்சித்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அந்தவகையில் நயன்தாராவின் பாலிவுட் என்ட்ரி செம மாஸாக இருக்கும் என்பதால் அவரை போலவே தானும் ஒரு படத்தில் நடித்து நல்ல அறிமுகத்தை பாலிவுட்டில் பதிக்கவேண்டும் என அவர் விடாமுயற்சி செய்து வருகிறார்.
இது அட்லீ காதிற்கு செல்ல உடனே அவர் ஒரு முடிவு எடுத்திருக்கிறாராம். ஆம் நயன்தாராவின் ஜவான் படத்தை முடித்துவிட்டு கீர்த்தி சுரேஷ் – வருண் தவான் வைத்து தெறி ரீமேக் படத்தை இயக்கவுள்ளாராம். இந்த படம் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த படம் என்பதால் அடுத்த வேலை அது தான் என அட்லீ முழு மூச்சில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதன் மூலம் நயன்தாரா – கீர்த்தி சுரேஷ் இருவரும் இந்தி படத்தில் அடுத்தடுத்து கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.