அப்ப செல்போன்.. இப்ப சால்வை.. ஆசையாய் சால்வை கொடுக்க வந்த முதியவர்: வெறுப்புடன் பிடுங்கி வீசிய சிவக்குமார்..!(வீடியோ)
Author: Vignesh26 February 2024, 5:44 pm
70, 80களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் சிவக்குமார். தமிழ் சினிமாவில் சிவகுமார் போன்று ஒரு நடிகரை பார்ப்பது அரிது. ஏனென்றால் இவர் எந்த வித கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்து வ்ந்தார். ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதற்கு சிவக்குமார் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். சினிமா பக்கம் போனா தன் மகன் பழக்கவழக்கங்கள் மாறிவிடுமோ என அஞ்சியே அவரது வீட்டார் முதலில் தயங்கி இருக்கிறார்கள். பின்னர் உறவினர் ஒருவரின் உதவியோடு சென்னைக்கு வந்திருக்கிறார் சிவகுமார்.

புகழ்பெற்ற நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் 1965ல் வெளிவந்த காக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் சிவகுமார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்று வளர்ந்தார். பலவேறு கௌரவ விருதுகளும் இருக்கு கிடைத்துள்ளது. திரைப்படங்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சிகளிலும் தலைகாட்டியிருக்கிறார்.

ஹீரோவாக பல படங்களில் நடித்து அதன் பின் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக உள்ளனர். இதனிடையே, நடிகர் சிவகுமார் சில வருடங்களுக்கு முன்பு பொது இடத்தில் செல்பி எடுத்த நபரின் போனை தட்டிவிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து, பலரும் சிவக்குமாரை விமர்சித்த நிலையில் தற்போது மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் சிவகுமாருக்கு சால்வை அணிவிக்க ஒரு நபர் வந்திருக்கிறார். அவரது, கையில் இருந்த சால்வையை பிடுங்கி தூக்கி வீசி இருக்கிறார் சிவக்குமார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Meendum Meenduma !!!
— Vignesh (@Vignesh58Viki) February 26, 2024
Innum indha aalu thirundhala pola ??#Suriya #Sivakumar #Kanguva #RohitSharma #Liverpool
pic.twitter.com/O2aTFuwFb9