ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து பிரபல நடிகையின் DEEP FAKE வீடியோ : கண்கூசும் அளவிற்கு பகிரப்பட்ட ஆபாச வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2023, 3:02 pm

ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து பிரபல நடிகையின் DEEP FAKE வீடியோ : கண்கூசும் அளவிற்கு பகிரப்பட்ட ஆபாச வீடியோ!

கடந்த சில நாட்களாக நடிகைகளின் DEEP FAKE வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஷ்மிகா வீடியோ வெளியாகியது பிரதமர் வரை கொந்தளிக்க செய்து.

ராஷ்மிகாவை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் டைகர் 3 படத்தில் நடித்த காட்சியை டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டனர்.

இப்படி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாவது தொடர்கதையாக உள்ள நிலையில், தற்போது புதிதாக பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவில் நடிகை ஆலியா பட் படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது DEEP FAKE வீடியோ என தெரியாமல் சிலர் உண்மை என நினைத்து பகிரத்தொடங்கியதால், இந்த வீடியோ வைரலானது.

இப்படி நடிகைகளின் DEEP FAKE வீடியோக்கள் தொடர்ந்து பரவி வருவதால் அது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…