“ஆணிவேரையே தூக்கிட்டாங்கப்பா”.. ராஜா ராணியிலிருந்து ரியாவை தொடர்ந்து இவரும் விலகல்..! அப்செட்டில் சீரியல் பிரியர்கள்..!
Author: Vignesh23 February 2023, 11:31 am
விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடரில் நாயகியாக நடித்தார் ஆல்யா மானசா. முதலில் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.
ராஜா ராணி என்ற தொடரில் ஆல்யா மானசாவுக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. ராஜா ராணி தொடரில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
ராஜா ராணி 2 தொடரில் இருந்து தனது இரண்டாவது பிரசவத்திற்காக நடிப்பை நிறுத்திய ஆல்யா மானசா தற்போது புதிய சீரியலில் நடித்து வருகிறார்.
ஆல்யா மானசாவிற்கு பதிலாக ரியா விஸ்வநாதன் தான் புதிய சந்தியாவாக களமிறங்கி பழைய சந்தியாவை மறந்து புதிய சந்தியாவை மக்கள் ஏற்றுக் கொண்ட இந்தநிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சீரியலில் இருந்து தானும் விலகுவதாக தனது சமூக வலைத்தளமொன்றில் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, பிரபல தொலைக்காட்சியில் “கோகுலத்தில் சீதை” என்ற சீரியலில் நடித்த ஆஷா கௌடா தான் தற்போது சந்தியாவாக நடித்து வருகிறார்.
நடிகை ரியாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலை இயக்கி வரும் இயக்குனர் பிரவீன் கூட சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பதிலாக இனி புதிய இயக்குனர் ரமேஷ் பாரதி என்பவர் தான் ராஜா ராணி 2 சீரியலை இயக்கப்போவதாக பேசப்பட்டு வருகிறது.
இப்படி தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலின் முக்கிய தூண்களாக இருந்தவர்கள் வெளியேறுவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இவர்களே வெளியேறுகிறார்களா? அல்லது விஜய் டிவி அழுத்தம் கொடுத்ததால் வெளியேற்றப்படுகிறார்களா? என்று கேள்வி எழுந்து வருகிறது.