“எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்”… ரூட்டை மாற்றி தனுஷ்க்கு செக் வைக்கும் ஐஸ்வர்யா: ஆரம்பிக்கும் புதிய பிரச்சனை..!

Author: Vignesh
9 March 2023, 6:00 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தவர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

அதைத்தொடர்ந்து அவர்களின் பிரிவுக்கான காரணங்களும் ஒவ்வொரு விதமாக பேசப்பட்டது. இப்போதும் தனுஷ் ஐஸ்வர்யா இவர்களுடைய விவாகரத்து செய்தி பேசும் பொருளாக தான் இருக்கிறது.

Dhanush-sons-Yathra-Linga-updatenews360

குழந்தைகளுக்காக இவர்கள் சேர போவதாக கூட பேசப்பட்ட நிலையில், அப்படி ஒரு விஷயம் இனிமேல் நடக்கவே நடக்காது என்ற வகையில் பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடைப்பெற்று வருகிறது. அதில் ஒன்றுதான் தனுஷ் 150 கோடியில் கட்டிய புது வீடு கிரகப்பிரவேசமும் ஒன்று.

dhanush - updatenews360

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக கட்டியுள்ள வீட்டிற்கு அவர் தன் குடும்பத்துடன் தான் அஸ்திவாரம் போட்டார். ஆனால் இடையில் ஏற்பட்ட பல மன கசப்புகளின் காரணமாக தற்போது அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு நடிகர் தனுஷ் மனைவின் குடும்பத்தில் யாரையுமே அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஐஸ்வர்யா, அவரின் பிள்ளைகள், செல்வராகவன் உட்பட யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்றாகதான் உள்ளது.

இதனிடையே, எந்த ஆடம்பரமும் இல்லாமல் நடிகர் தனுஷ் தன் புது வீட்டிற்கு குடி பெயர்ந்தது பல விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அந்த பிரச்சினை சற்றே ஓய்ந்துள்ள நிலையில் வேறு ஒரு சர்ச்சை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

selvaraghavan-updatenews360

அதாவது நடிகர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தற்போது அவரின் அண்ணன் செல்வராகவனை அடிக்கடி சந்தித்து பேசி வருவதாகவும், லால் சலாம் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வரும் ஐஸ்வர்யா சில டிப்ஸ்களை செல்வராகவனிடம் கேட்பதற்காக தான் இந்த சந்திப்பு நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

லைக்கா தயாரிக்கும் அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் கூட சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அந்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

dhanush - updatenews360

இந்நிலையில் ஐஸ்வர்யா இதன் மூலம் எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்ற ரீதியில் இவர்கள் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது. அதாவது, நானே வருவேன் திரைப்படத்திலிருந்தே தனுஷுக்கும் அவருடைய அண்ணனுக்கும் சரியான பேச்சுவார்த்தை கிடையாது என்றும், அதை தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா தற்போது இந்த பிரச்சனையின் மூலம் குளிர் காய்கிறார் என்ற விமர்சனமும் தற்போது பேசப்பட்டும், இந்த விவகாரம் தற்போது அவர்கள் குடும்பத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

dhanush-aishwaryaa-1.jpg -updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 897

    5

    4