இவங்களையும் விட்டு வைக்கலையா?.. சினேகாவை தொடர்ந்து பிரபல நடிகைக்கும் அதே பிரச்சனை தான்..!

Author: Vignesh
26 November 2022, 7:30 pm

சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களை பற்றி எதாவது ஒரு செய்தி கிடைத்தால் போதும், அதை பெரியளவில் பேசுவது வழக்கம் அப்படி நடிகை சினேகா காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரசன்னாவை 10 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரியவுள்ளதாக செய்திகள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சினேகாவும் பிரசன்னாவும் புகைப்படங்கள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த வதந்திக்கு காரணம் பிரபல தொலைக்காட்சி தான் என்றும் பேட்டிக்கொடுத்து அதிக தொகை சினேகா கேட்டதால் இப்படியான வதந்திகளை பரப்பியதாகவும் கூறப்பட்டது.

sneha - updatenews360.jpg 2

இந்நிலையில் நடிகை சமந்தா ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிப்பெற்றுள்ளதாகவும் செய்திகள் நேற்றில் இருந்து வெளியாகியது.

ஆனால் சமந்தா ஹைதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக சமந்தா தரப்பில் கூறப்பட்டது. மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறாரே தவிர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை யார் வைரலாக்கினார்கள் என்று தெரியவில்லை.

samantha - updatenews360

இப்படி ஒருவரின் வாழ்க்கையில் விளையாட இதுபோன்று கேவலமாக நடந்து கொண்டு வருவதை பலர் கண்டித்தும் வருகிறார்கள். இப்படி சினேகா – சமந்தா என நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் விரோதம் காரணமாக இதை செய்கிறார்கள் என்று சிலர் கூறியும் வருகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1345

    1

    1