ட்ரைலர் ரிலீசுக்கு பின் நாசமாப்போன ரோகிணி தியேட்டர்… ரசிகர்களின் அட்டூழியத்தை படம் பிடித்து காட்டிய பிரபலம்!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. மேலும், லியோ படத்திற்கு சென்சார் யூ/ ஏ சான்றுகள் வழங்கி உள்ளது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், நேற்று 6:30மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதன்படி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த டிரைலரில் “‘எவனோ ஒரு தே**யா பையன் என்னை மாதிரி’ இருக்கான்னு ஆளாளுக்கு என்ன போட்டு உயிரை எடுத்தா நான் என்னடி பண்ணுவேன்? என விஜய் ஆக்ரோஷமாக பேசுகிறார். இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளார். ஒரு விஜய் சீரியல் கில்லராகவும் இன்னொரு விஜய் ஜாக்லெட் பேக்ட்ரி நடத்துபவராகவும் ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது. மேலும், ‘இதுக்கு மேல உண்மைய சொல்லனும்னா லியோ தான் உயிரோடி வரணும்’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த ட்ரைலரை பார்த்து விஜய் ரசிகர்கள் செம ஹேப்பி ஆகிவிட்டனர்.

இந்நிலையில் சென்னை ரோகினி திரையரங்கில் லியோ ட்ரைலர் ரிலீசுக்கு பின்னர் விஜய் ரசிகர்கள் அங்குள்ள தியேட்டர் இருக்கைகளை உடைத்து நாசம் செய்து பெரும் பொருட்சேதம் ஏற்படுத்தி அட்டூழியம் செய்துள்ளனர். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்,

‘படத்தை படமா பாப்போம். அதுல கஞ்சா அடிச்சா நாங்களும் கஞ்சா அடிக்க மாட்டோம். அதுல கொலை பண்ணா நாங்ளும் பண்ண மாட்டோம்’ என்றிருந்த 90s and 2K Boomers.

ரெண்டரை நிமிச ட்ரைலரையே அமைதியா பாக்க தெரியாத.. உங்களோட இந்த ஒழுக்க கேடை, சினிமா வெறியை, எல்லை மீறி ஹீரோக்களுக்கு காவடி தூக்கற காமடியை.. பாத்து மொத்த தமிழர்களும், இதர மாநில மக்களும் சிரிப்பா சிரிக்கறாங்க. இதுல ரெண்டரை மணிநேர படம் பாத்துட்டு.. கெட்டுப்போகாம.. ஒழுங்கா இருப்பாங்களாம். செம காமடிடா!!

இப்படி பெரிய பொருட்சேதம் உண்டாக்குற அளவுக்கு சினிமா பைத்தியம் முத்திப்போன உங்களுக்கு.. வீட்லயும், ஸ்கூல், காலேஜ், வேலை செய்ற எடத்துல.. ஒருத்தரும் புத்தி சொல்ல மாட்டாங்களா? எல்லாரும் சொல்லியும் மண்டைல ஏறலையா? என விஜய் ரசிகர்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து கொந்தளித்துள்ளார்.

Ramya Shree

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

5 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

6 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

7 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

7 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

8 hours ago

This website uses cookies.