AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!

Author: Prasad
10 April 2025, 4:53 pm

ரசிகர்களுக்கான திரைப்படம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையே வெளிவந்துள்ள இத்திரைப்படம் அஜித் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் வெகுஜன ரசிகர்களிடம் இத்திரைப்படத்திற்கான வரவேற்பு எவ்வாறு இருக்கிறது என்பதை இன்னும் இரண்டு நாட்கள் கழித்துதான் நாம் காண முடியும். 

again ajith join with adhik ravichandran in ak 64

இந்த நிலையில் இத்திரைப்படத்தை பார்த்தவர்கள் பலரும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மாஸ் ஆன காட்சிகளை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அஜித்தின் அடுத்த படத்திற்கான குறியீடு ஒன்று உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

AK 64

கார்த்திக் ரவிவர்மா என்ற ரசிகர் ஒருவர் தனது “X” தளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை அவர் பார்த்துக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காரின் நம்பர் “DIRAK 642026” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை DIRector AK 64 2026 என்று டீகோட் செய்தோமானால் அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தை இயக்கப்போவது ஆதிக் ரவிச்சந்திரன் எனவும் இத்திரைப்படத்தின் பணிகள் 2026 ஆம் ஆண்டு தொடங்கும் எனவும் பொருள் அறியலாம். இதனை வைத்துதான் அஜித்குமார் தனது அடுத்த படத்திலும் ஆதிக்குடன் இணையவுள்ளதாக கார்த்திக் ரவிவர்மா பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Leave a Reply