“சந்தானத்தை கூறு போட்டு விற்கின்றனர்..” ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர் வெளியீடு..!

Author: Rajesh
21 January 2022, 1:51 pm

தமிழ் சினிமாவில், காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சந்தானம். சமீபத்தில் இவரது நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான டிக்கிலோனா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது, ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

இந்தப்படத்தை மனோஜ் பீதா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளான இன்று ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசரை நடிகர் ஜீவா மற்றும் நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளனர். இதன் டிசர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • kochadaiiyaan movie rerelease soon in theatres ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…