விஜயின் இந்த படம் தோல்வியா..? அதை மீட்டெடுத்தது பிரதீப்-ஆ..? அதிர்ச்சி தகவலை போட்டுடைத்த தயாரிப்பாளர்

Author: Rajesh
19 March 2023, 7:30 pm

சமீபகாலமாக வெளியாகும் படங்களின் உண்மையான வசூல் விபரங்கள் குறித்த தகவலை கண்டுபிடிப்பதில் சிக்கலாக தான் இருந்து வருகிறது. அதிலும், டாப் நடிகர்களின் படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பதை துல்லியமாக யாராலும் சொல்ல முடியவில்லை. இணையத்தில் ரசிகர்கள் 100 கோடி, 300 கோடி, 400 கோடி வசூல் செய்ததாக பதிவிட்டு கொள்கின்றனர். பெரிய ஹீரோக்களின் படங்கள் எப்படியும் அவர்கள் ரசிகர்களின் வரவேற்பால் வசூல் செய்துவிடும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு உண்டு.

விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அந்த வகையில், அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இப்படம் வெளியான போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. கிட்டத்தட்ட 160 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிகில் படம் எடுக்கப்பட்டது. 300 கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இதனால் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் மதுரை அன்புச்செல்வன் ஆகியோர் வீடு மற்றும் தொழில் இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். அதன் பிறகு, ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு தொடர்ந்து நிறைய சிரமங்கள் அடுத்தடுத்து வரத் தொடங்கியது. சமீபத்தில், பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

pradeep ranganathan - updatenews360

சமீபத்திய விழா ஒன்றில் பேசிய ஏஜிஎஸ் CEO அர்ச்சனா கல்பாத்தி பழைய படத்தின் தோல்வியால் மிகுந்த கஷ்டத்தில் இருந்தோம். அதை மீட்டெடுத்து மிகப்பெரிய உச்சிக்கு கொண்ட சென்றது லவ் டுடே படம் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் பிகில் படம் பிளாப்பா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 467

    1

    0