கமல் ஹாசனின் “Thug Life”ல் இணைந்த “பூங்குழலி” – அப்போ மெகா ஹிட் நிச்சயம்!

Author: Rajesh
12 January 2024, 4:22 pm

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். இரண்டுக்கும் மேற்பட்ட விவகாரத்து , பல நடிகைகளுடன் ரகசிய உறவு என இருந்த கமல் ஹாசன் தற்போது தலைமையில் தான் வாழ்ந்து வருகிறார். வயது 69 ஆகியும் நடிப்பு,தொலைக்காட்சி, அரசியல் என படு பிஸியாக இருந்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இளம் ஹீரோக்களுக்கு திகில் கொடுத்து வருகிறார்.

தற்போது கமல் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “தக்லைஃப்” படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த கூட்டணி ஏற்கனவே நாயகன் படத்தின் மிகப்பெரிய கிளாசிக் ஹிட் கொடுத்தனர். எத்தனை டான் படம் வந்தாலும் நாயகன் படத்தின் சாயல் இல்லாமல் இருக்காது.எனவே இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இப்படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் தற்ப்போது கிடைத்துள்ள தகவலின் படி தக்லைஃப் படத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தக் லைஃப் படத்தில் கமல் மாறுபட்ட தோற்றத்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ‘யகூசா’வாக நடித்திருக்கிறார். வரும் ஜனவரி 18ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 345

    0

    0