இனிமேல் அஜித் படம் நடிக்க போவதில்லை? வேற ஒரு ரூட்டில் கோடியில் புரளும் தல!

Author: Shree
8 August 2023, 6:00 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், சுற்றுலா செல்லுவது என தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவார். குறிப்பாக பைக் ரேஸில் ஆர்வமிக்கவர் அஜித். அவர் வழக்கமாக, ஒரு படத்தை நடித்து முடித்து விட்டால், பைக் ரைடிங் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இவர், கடைசியாக வெளிநாடுகளில் பைக் ரைடு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியது. மேலும், AK மோட்டோ ரைடு என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ந்து பைக் ரெய்டு சென்று ஜாலியாக என்ஜாய் பண்ணும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

இதனிடையே அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருந்தும் அப்படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து பைக் ரெய்டு செல்வதை அவரது ரசிகர்களும் விரும்பவில்லை. முன்பெல்லாம் ஒரு படத்தை முடித்த பின்னர் ரிலாக்ஷேஷனுக்காக தான் பைக் ரெய்டு செல்வார். ஆனால், தற்போது கேப் விட்டு கேப் விட்டு பைக்கிலே டூர் செல்வதால் ரசிகர்கள் அஜித் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

அண்மையில் தான் நியூசிலாந்துக்கு சுற்றுலா சென்று திரும்பினார். தற்போது மீண்டும் பைக்கிலே வேர்ல்ட் டூர் ட்ரிப் அடித்துள்ளார். சமீபத்திய போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதனிடையே அஜித்திற்கு ட்ரோன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் அதிகம் ஆர்வம் கொண்டிருக்கிறாராம். ஆம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் ட்ரோன் ஆராய்ச்சி குழுவிற்கு நடிகர் அஜித்குமார் தான் கமெண்ட்டராக இருக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்ட இந்த குழு 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது தக்‌ஷா என்ற பெயரில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றியது.

இந்நிலையில் இக்குழுவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆம், இந்திய ராணுவம் தானாக முன்வந்து இந்த குழுவிடம் 200 ட்ரோன்கள் தயாரிப்பதற்கான இடத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. இதற்கு ரூ.160 கோடி பட்ஜெட்டாக ஒதுக்கப்பட்டுள்ளதாம். அஜித் தலைமையிலான இந்த குழு தற்போது மிகப்பெரிய பொறுப்பில் இருப்பதால் அஜித் அது சம்மந்தமான வேளைகளில் கவனத்தை செலுத்துவார் என எதிர்பார்க்க முடிகிறது. எனவே இனிமேல் அஜித் படங்களில் நடிக்க மாட்டார் என உறுதி படுத்தாத செய்தி உலா வந்துக்கொண்டிருக்கிறது.

  • Bigg Boss Season 8 tamil Voice Over Artist பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவரா.. எல்லா மொழியிலும் பிண்றாரே..!!
  • Views: - 569

    1

    0