பிரபல வில்லன் நடிகரை காதலிக்கும் கட்டா குஸ்தி நடிகை..? நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரல்.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

Author: Babu Lakshmanan
12 January 2023, 11:26 am

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி.
‘மாயநதி’, ‘வரதன்’, ‘காணக்காணே’ உள்ளிட்ட மலையாளப் படங்கள் விமர்சன ரீதியாகவும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதுமட்டுமில்லாமல், தமிழில் ‘ஆக்ஷன்’ ‘ஜகமே தந்திரம்’ ‘கார்கி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், பொன்னியின் செல்வனில் ‘பூங்குழலி’ கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு ரசிகர்கள் பட்டாளம் திரண்டது.

அண்மையில் விஷ்னு விஷாலுடன் நடித்து வெளியான கட்டா குஸ்தி படத்தில் ஆகஷன் காட்சிகளில் நடித்து அசத்தி இருந்தார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஹார்ட்டின் குறியீட்டையும் போட்டுள்ளார். இதனால் , இருவரின் ரசிகர்களும் ‘காதலுக்கு வாழ்த்துக்கள்’ என கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

ஆனால், இது வெறும் நட்பா இல்லை காதலா என ஐஸ்வர்யா லக்ஷ்மி எதுவும் சொல்லவில்லை. இதனால், சினிமாத்துறையில் கிசுகிசுப்புகள் எழுந்துள்ளன.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 731

    1

    0