மானமே போகுது ஐஷுவை வெளியில் அனுப்புங்க… பிக் பாஸ் டீமிடம் சண்டை போட்ட பெற்றோர்..!
Author: Vignesh4 November 2023, 4:49 pm
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்பு எப்போதும் இல்லாத வகையில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் எல்லாம் இந்த சீசனில் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது.
இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய், யுகேந்திரன் , வினுஷா ஆகோயோர் எலிமினேட் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் மேடை பேச்சாளரான கோவில்பட்டி அன்னபாரதி, ரேடியோ ஜாக்கி பிராவொ, சின்னத்திரை நாயகி ரக்ஷித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் உள்ளிட்டோர் பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளார்.
இந்நிலையில், ஐஷு நெக்சனுக்கு முத்தம் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படி எல்லாம் நடந்து கொண்டு வெளியே எனக்கு ஆள் இருக்கிறார் என நிக்சனிடம் சொல்கிறார். இந்நிலையில், ஐஷுவின் பெற்றோர் தங்களது மகளின் செயல்பாடுகளால் குடும்ப மானம் போகிறது என்று கூறி அவரை சோவியிலிருந்து வெளியில் அனுப்பும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பிக் பாஸ் டீமும் நாங்கள் அறிவுரை சொல்கிறோம். சரியான காரணம் இல்லாமல் எங்களால் அவரை வெளியில் அனுப்ப முடியாது என்று பதில் அளித்துள்ளனர்.