“விவாகரத்துக்கு பிறகு வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்”… பிரபல வாரிசு நடிகை ஒபன் டாக்..!

Author: Vignesh
9 February 2023, 3:00 pm

நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் 70 -களில் முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமியின் மகள். இவர் “நியாயங்கள் ஜெயிக்கட்டும்” என்ற படத்தின் மூலம் 1990 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

aishwarya - updatenews360

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் என்று சொல்லலாம். பல படங்களில் நடித்து வந்த இவர், 1994 -ம் ஆண்டு தன்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இதன் பின் தன்வீர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அவருடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

aishwarya - updatenews360

இதனிடையெ, பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா பாஸ்கரன், தன்னுடைய திருமணம் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பகிர்ந்துள்ளார். அதில் ஐஸ்வர்யா பாஸ்கரன், “தன் முன்னாள் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதில் தனக்கு வருத்தம் இல்லை” என்றும், “அதே போல தானும் விவாகரத்து செய்த பிறகு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், ஆனால் அதுவும் குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

aishwarya - updatenews360

இதனிடையே, சமீபத்தில் ஐஸ்வர்யா பாஸ்கரன், அருண் விஜய் நடிப்பில் வெளியான “யானை” என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

aishwarya - updatenews360
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!